Thursday 8 August 2013

பெரியாண்டவர் ஆலயம் திருநிலை குழந்தை பேரு அரு ளும்பரிகாரத்தலம்


பெரியாண்டவர் ஆலயம் திருநிலை குழந்தை பேரு அருளும் பரிகாரத்தலம் 

தொண்டைமண்டலம் எனப்படும்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 
சைவகுரவர்களால் பாடல் பெற்ற புகழ்மிக்க சிவதலமான திருக்கழுக்குன்றம் இங்கிருந்து 7 கிலோமீட்டர் தூரத்திலும், செங்கல்பட்டில் இருந்து 14 கிலோமீட்டர்  தொலைவிலும், திருப்போரூரில் இருந்து 12 கிலோமீட்டர்  தொலைவிலும் உள்ளது திருநிலை பெரியாண்டவர் ஆலயம் . பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்துள்ள ஆலயம் இது



                                            ஆலயத்தின் முகப்பு தோற்றம் 
                            



           மேற்கே வண்டுகள் உலவும் வண்ண சோலைகலாம்  
வான்முகில் வந்து மோதும் வின் முட்டும் மலைகளாம் ,குயிகள் பாடும் ,மயில்கள் ஆடும் ,மான்கள் துள்ளி விளையாடும் அடர்ந்த காடுகளாம் வடக்கே  இயற்கை எழில் நிறைந்த பசும்சோலைகள் சூழ்ந்த புள்ளினங்கள் இசைபாடும் நீர் நிறைந்த சித்தாமிர்த குளம் தெற்கே  கடலென தேங்கும் நீர் நிறைந்த ஏரி கரைமுழுதும் பசுமை மரம் நிறைந்த கரையாம்  கிழக்கே விளைந்த நெல் மணிகள் சங்கிதம் பாடும் பசுமைஎன  நிறைந்தவிளை  நிலங்கலாம் இதன் மத்தியில் கிழக்கு முகம் வாசல் கொண்டு வெட்ட வெளியில் வில்வமர தென்றல் காற்றின் வாசத்தில் இருபத்தி ஓர்  சிவகணங்கள் சூழ கருணையே நிறைந்த பார் உலகம்  போற்றும் பரமனாம் அங்காலதேவியின் மனவாளனாம் மனிதர்களை வாழவைக்க வந்த வள்ளல் பெரியாண்டவர் என்ற நாமத்துடன்  சுயம்புலிங்கமாக தோன்றி அருள்பாலிக்கும் அற்புத காட்சி திருநிலை பெரியாண்டவர் ஆலயத்தில் காண்போம்.

சித்தாமிதகுளம் 

இவ் ஆலயத்தில் மூன்று  நிலை கொண்ட பிரகாரம் அமைந்துள்ளது முதல் பிரகாரத்தின் நுழைவு வாயிலில் பாலவிநாயகர் ஒருபுறமும் மறுபுறம்  பாலமுருகன்  நின்று நுழையும் நம்மை வரவேற்பது கண்கொள்ள காட்சி  






                        நுழைவு வாயிலின் இடதுபுறம் தலவிநாயகர் காட்சி தருகிறார். 



நுழைவு வாயிலின் வலதுபுறம்  முருகப் பெருமான் அமர்ந்து அருள்பாலிக்கும் காட்சி 


முதல் பிரகாரத்தின் உள்ளே பதினாறுகால் மண்டபம் காண்கின்றேம் தியானம் செய்ய ஏற்ற இடமாக விளங்குகின்றது இங்கு கொடிமரத்திற்கு பதிலாக திருநீற்று விநாயகர் காட்சிதருகின்றார் அவருக்கு திருநீரால் அபிஷேகம் செய்தால் செல்வம் ,கல்வி அறிவை கொடுகின்ற கடவுளாக விளங்குகின்றார்





மண்டபத்தின் உள்ளே நடராஜ பெருமானின் ஆடல்கோலமும் , மனிதவடிவில் வந்த ஈசன் பெரியண்டவராக நின்றகோலமும் அவரை தாய் அங்காளபரமேஸ்வரி வணங்கும் காட்சியோடு திருமூலரும்,இராமலிங்க அடிகளாரும் வணங்கும் காட்சியை காணலாம்

                                                  

 திருமூலரும்,இராமலிங்க அடிகளாரும் வணங்கும் காட்சியை காணலாம்



                                                 நடராஜபெருமான் 

 விபுதி விநாயகருக்கு பின்புறம் பலிபீடமும் சுயம்புலிங்கதிற்கு எதிராக நந்தி பகவான்  மனிதவடிவில் இருகைகலோடு காட்சி தரும் கோலம் வேறு எங்கும் காண முடியாத அற்புதம் ஆகும் .மண்டபத்தின் உள்ளே படகாட்சிகள் வரையபட்டுள்ளது 



மனித உருவில் நந்தி, திருநிலை பெரியாண்டவர் ஆலயம்   
  மனிதவடிவில் நந்தி                                                                                                                                   மனிதவடிவில் ஈசன் 

                                                                                     
                                                         

இரண்டாவது பிரகாரத்தின் நுழைவு வாயிலில் தங்கதடு வேயபட்டு அழகான வேலைபாடுகளுடன் விடையியின் மேல் சிவனும்சக்தியும் அமர்ந்த கோலத்தோடு

                                             இரண்டாவது பிரகாரத்தின் நுழைவு வாயில் 

ஒருபுறம் சித்திபுத்தி விநாயகறும் மறுபுறம்வள்ளி தெய்வானை முருகனோடு காட்சிதருகின்றார்


                                                           சித்தி புத்தி விநாயகர் 



                             வள்ளி தெய்வானை முருகனோடு காட்சிதருகின்றார்




நந்திபகவான் மனைவியோடு  அருளும் படகாட்சி 

                         ஈசனுக்கு பார்வதி தேவி சூலாயுதம் வழங்கும் பட காட்சி 

                                   

உள்ளே சென்றால் வில்வமரமோடு  இருபத்தி ஓர் சிவகணங்கள் கைக்குப்பி செவ்வக வடிவில் அமர்ந்து அருள்பாலிக்கும் காட்சியோடு சிவன் சக்தி அமர்ந்தகோலம் தென்திசை நோக்கிய குருபகவானும் பெரியாண்டவர் மனிதவடிவில் அமர்ந்தகொலமும் 

சிவனும், சக்தியும் 
திருநிலை பெரியாண்டவர் ஆலயம்
                                                            
                                  சிவன் சக்தி அருள்பாலிக்கும் அற்புத காட்சி 



                                                        சுதை வடிவில் பெரியாண்டவர்

                             பெரியாண்டவர் அமர்ந்தநிலையில்  அருளும் கோலம் 

                                             
அங்காள பரமேஸ்வரியும் அமர்ந்து அருள்பாலிக்கும் அற்புத கோலம் 
அடுத்து அங்காள பரமேஸ்வரியும் அமர்ந்து அருள்பாலிக்கும் அற்புத கோலமும் ,ஆண்பெண் பேதத்தை போக்கும் அர்த்தநாரிஸ்வரர்   காட்சிதருகின்றார்  
  
இதனைபோல் இருபத்தியோர் சிவகணங்கள்  அருள்பாலிக்கின்றன  

















                                          

                          ஆண்பெண் பேதத்தை போக்கும் அர்த்தநாரிஸ்வரர்                                                               காட்சிதருகின்றார்  
                                              
                                                    மூன்றாவது நுழைவு வாயில்

மூன்றாவது பிரகாரத்தின் நுழைவு வாயிலில் மேற்புறம் கஜ லட்சிமி அமைந்துள்ளது கருவறையின் உள்ளே சுயம்புலிங்க மூர்த்தியாக பெரியாண்டவர் அமைந்துள்ளார்      
                                                                                                        
         


சுயம்புலிங்கம் மூலவர் பெரியாண்டவர் 
லிங்கத்தின் இருபுறமும் சிவன் பாதமும் ,அங்காள பரமேஸ்வரி பாதமும் அமைந்துல்லாது
               
                 ஈசன் பாதம்                                                                                                                                                                                                                     ஆலயத்தின் உள்ளே முருகன்                                                                                                                                                                                 ஆலயத்தின் வெளிபுறம் நாகதம்மன் அரசமரம் வேப்பமரம் மத்தியில் காணும் காட்சி மகிழ்வுதரும்.



 நாகதம்மன் அரசமரம் வேப்பமரம் மத்தியில் அற்புத காட்சி 

ஈசன் பெரியாண்டவராக இங்கு வந்து நின்ற வரலாற்றை காண்போம்  

கைலாயத்தில் ஒரு நாள் சிவபெருமான் பார்வதியோடு அமர்ந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த நாரத முனிவர்   அவர்களை வணங்கினார். வந்தவர் மூஏழு  உலகங்களிலும் -தேவலோகம் முதல், அனைத்து உலகிலும் அதர்மம் பெருகி விட்டது என்றும், தேவர்களும், தேவகணங்களும் அசுர கணங்களின் தொல்லையை தாங்க முடியாமல் அவதியுற்று தத்தம் இடங்களை விட்டு ஓடி காட்டிலும், பிற இடங்களிலும் மறைந்தவாறு வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்றும், அதை கட்டுப்படுத்த முடியாமல் தேவர்கள் முதலானோர்  கஷ்டப்படுவதாகவும், சிவபெருமான் அவருக்கு உதவி அதர்மங்களை ஒழிக்க உதவுமாறு வேண்டிக் கொண்டார் 

அதைக் கேட்ட சிவபெருமான் வருத்தம் அடைந்தார். கோபத்தில் அவர் உடலில் வியர்வை வழிந்தது . உடனே  அந்த வியர்வை துளிகளில் இருந்து தனது சக்திகளைக் கொண்ட இருபத்தி ஒரு சிவகணங்களை உருவாக்கினார். சிவபெருமானினால் தோற்றுவிக்கப்பட்ட சிவகணங்கள் சிவன் மற்றும் பார்வதியை வணங்கி நின்று, தாம் என்ன செய்ய வண்டும் என அவரைக் கேட்டு பணிந்து நின்றன. சிவபெருமானும் அவர்களை உடனே அனைத்து உலகங்களுக்கும் சென்று அதர்மங்களை அழித்து விட்டு வருமாறு கூற அந்த சிவகணங்களும் உடனேயே அனைத்து இடங்களுக்கும் சென்று அதர்மங்களை அழித்தப் பின் சிவபெருமானை சென்றுகாணாமல்  தாம் முடித்து விட்ட வேலையைப் பற்றிக் கூறாமல் பூலோகதில் உள்ளா சிவகணத்தைகாண  பூலோகத்துக்கு சென்றுவிட்டன. அங்கு பல இன்னல்களுக்கும்இடையில் மானிடர்கள் ஈசன் பால் அவர்கள் கொண்ட அன்பினையும்   பூலோக பக்திமுறை பிடித்து இருந்ததினால் இன்னும் சில நாட்கள் பூலோகத்தில் தங்கிவிடலாம் எனதங்கிவிட்னர் அசுரர்களால் அவதிப்பட்ட தேவர்களும், தெய்வ கணங்களும் அசுரகணங்கள் அழிந்துடன் தத்தம் இடங்களுக்கு மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார்கள். 


                                         
பெரியாண்டவர் அங்கலபரமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் 
                                                               

தேவலோகத்தில் அமைதி திரும்பியதும், தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று தம் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள். அப்போது அவர்கள் அசுரர்களை அழித்த சிவ கணங்களுக்கும் நன்றி தெரிவிக்க அவர்களை தேடிய போது, சிவ கணங்கள் அங்கு இல்லை. இதனை கண்ட சிவபெருமான் சிவகணங்களை நினைக்க  சிவகணங்களும் அங்கு வந்து சிவனை வணங்கினார்கள். தான் கொடுத்த வேலையை முடித்ததும்  இங்குவரமல் எங்கே சென்றிர்கள் என்று வினாவ பூலோகம் சென்றதாக கூற  கோபமுற்ற சிவபெருமான் பூமியின் மேல் கொண்ட அன்பினால் இங்கு வராமல் பூமியில் இருந்த நீங்கள் இனி பூமியிலே சென்று  மண்ணாக கிடைக்குமாறு சபித்தார். தாம் செய்துவிட்ட தவற்றுக்கு மனிப்புக் கோரிய சிவகணங்கள் அவரிடம் தம்மை மன்னித்து மீண்டும் சிவகணங்களாக மாற அருள் புரிய வேண்டும் எனக் கேட்டார்கள். சிவபெருமானும் அவர்களை பூமியிலே சென்று மண்ணாகக் கிடந்தால் தான் தக்க சமயத்தில் வந்து அவர்களை ஆசிர்வதித்து மீண்டும் சிவகணங்களாக மாற்றுவதாக உறுதி கூறினார். சிவ கணங்களும் வருத்தத்துடன் பூமிக்கு சென்று விட்டன.

பெரியாண்டவர் தோன்றல் 

முன் ஒரு காலத்தில் சுந்திரபத்திரன் என்ற அசுரன் சிவபெருமானை வணங்கி பல அரிய வரங்கள் பெற்றான் அவற்றுள் முக்கியமானது அவனது மரணம் சிவசக்தி சொரூபமானவரால் மட்டுமே நிகழ வேண்டும். மேலும் அதற்கு முன்னால் எம்பெருமான் மனித அவதாரம் எடுத்து முடித்திருந்தால் மட்டுமே அவனை கொல்ல முடியும் என்ற சிக்கலான வரம் பெற்று இருந்தான். இதனால் இந்திரன் முதலான தேவர்களை விரட்டியடித்து அவர்களின் ஆட்சியை கைப்பற்றி பலவகையில் தொல்லை கொடுத்து வந்தான். அசுரனின் தொல்லை பொருக்க முடியாமல் சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டு காக்குமாறு வேண்டினர். தேவர்களை காக்கும் பொருட்டும் அசுரர்களை அழிக்கும் எண்னத்துடன் சக்தியைக் காண எம்பெருமான் சென்றார்.

அசுரர்களின் அராஜகம் அதிகமாகி விட்டதால் அவர்களை உடனே அழித்து தேவர்களை காக்க வேண்டும், உடனே புறப்படு என்று கூறி நின்றார். ஜயன் கூறியதைக் கேளாமல் உமையவள் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து அமைதி பூண்டு இருந்தார். தாயிடம் இருந்து பதில் வரததால் கோபம் கொண்ட எம்பெருமான் என்னுடைய சொல் கேட்டு பதில் கூறாமல் இருக்கும் நீ மீண்டும் மானிட பெண்ணாக பிறப்பாய் என கண்கள் கனல் கக்க எச்சரித்தார். இவ்வார்த்தை கேட்டு தியாணத்தில் இருந்து விழித்தெழுந்த பார்வதிதேவி ஜயனை நோக்கி எம்மை மானிடராக பிறக்க சொல்லும் நீவிர், எம்மில் பாதியாக விளங்குபவர் தானே ஆகவே நீரும் ஓரு நாழிகை மனிதனாக பிறக்க வேண்டும் என சாபமிட்டார். உமை அவதாரத்தின் ஆழமும், அர்த்தமும் புரிந்து பேசினாள். இவ்வார்த்தையைக் கேட்ட ஜயனின் சித்தம் மெல்ல கலங்கியது. ஈசன் தன்நிலை மறந்து மனித அவதாரம் கொண்டார்.

உலகமெல்லாம் திக்கு திசையின்றி அலைந்து திரிந்து வந்தார். பரமனின் இந்நிலை கண்டு உமையவள் அச்சமுற்றாள். உலக ஜீவராசிகள் பயத்தில் நடுங்கின. தேவர்கள் முதலனோர் தாயிடம் வணங்கி பரமனை காத்து அருளுமாறு வேண்டினர்.உடனே தாய் தன் சூலாயுதத்தை வீசி எறிந்தாள் அது பிரகாசமாய் பூமியில் ஓர் இடத்தில் நிலையாய் நின்றது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து இருபத்தி ஓர் மண் உருண்டைகள் சிதறி சுற்றி விழ்ந்தன. பின் அவை ஒவ்வொன்றும் சிவகணங்களாக மாறி தான் முன்பு பெற்ற சாபத்தில் இருந்து விடுதலை பெற்று சுற்றி ஜயனின் வருகைக்காக காத்து நின்றன. சூலாயுத ஒளியைக் கண்டு எம்பெருமான் திருநிலையாய் ஓர் இடத்தில் பாதம் பதித்து ஒருநிலையாய் நின்றார்.சிவகணங்கள் எழிற்சி பெற்றன  பார்வதிதேவி அவ்விடத்திலேயே வணங்கி நின்றாள். ஒரு நாழிகை நேரமும் முடிய மனிதனாய் வந்தவர் சிவமாய் உறுமாறி தோன்றினார். மேலும் பெரிய மனிதனாக இவ்வுலகை வலம் வந்த ஆண்டவராகிய நீவிரே இன்று முதல் பெரியாண்டவர் என்று அழைக்கப்படுவீர் என உமையவள் கூறினாள். இவ்வார்தையை கேட்ட தேவர் முதலானோர் பெரியாண்டவா பெரியாண்டவா எனக் கூறி அழைத்து அவர் பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர்.

சுற்றி நின்ற சிவகணங்களும் எம்பெருமான் நாமம் கூறி வணங்கி நின்றன.
ஒருநிலையில் திருநிலையாய் நிறுத்திய இவ்விடம் திருநிலை என அழைக்கப்படும் எனக் கூறிய ஜயன், மேலூம் உலகை காக்கும் நாயகி உமையவள் என்னை திருநிலையாய் நிலை கொண்டு ஆட்கொண்டதால் இன்று முதல் திருநிலைநாயகி எனஅழைக்கப்படுவாள் என்று வாழ்த்தினார். இவ்வார்த்தையைக் கேட்ட தேவர் முதலானோர் திருநிலை நாயகி என அழைத்து மகிழ்ந்து அவர் பொற்பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர். சிவபெருமான் திருநிலையாய் ஒருநிலையில் தன்பாதம் பதித்து அருள்புரிந்த திருத்தலமே திருநிலையாகும்


.
மேலும் பார்வதிதேவி தாயின் கருவின்றி பெரியமனிதனாக தோன்றி நிவீரே உலகை வலம் வந்தமையால் இவ்வுலகில் கருவின்றி வாடும் தம்பதியர்க்கு யார் இவ்விடத்தில் உன்நாமம் நினைக்கின்றார்களோ அவர்களுக்கு மழலைகளை வழங்கி அருள் புரியவேண்டும் என வேண்டினார். இறைவனும் அவ்வாறே நடைபெறும் என அருளினார். சிவகணங்கள் தங்கள் நிலை என்ன என்று வினாவ யாரெல்லாம் பூலோகத்தில் பெரியாண்டவராக வணங் குகின்றார்களோ அவர்களெல்லாம் உங்களையும் மண்வடிவில் பிடித்து வணங்குவார்கள் என்று கூறி கைலாயம் சென்றார் இன்றும் இவ்வாலயத்தின்சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து 21 ஓர் மண் உருண்டைகள் சிதறி சுற்றி விழ்ந்து, பின் அவை ஒவ்வொன்றும் மண்ணில் இருந்து சிவகணங்களாக உருமாறி நின்றதை நினைவு கொள்ளும் விதமாக பெரியாண்டவரை குலதெய்வமாக கொண்ட ஒவ் ஒரு குடும்பமும் 


                       இருபத்தி ஓர் மண் உருண்டைகள் சிவகணங்கலாக 

                       இருபத்தி ஓர் மண் உருண்டைகள் சிவகணங்கலாக பூசை செய்து                            படையலிட்டு கற்பூரம் காட்டும் காட்சி 

 இவ்வாலயத்தில் 21 ஓர் மண் உருண்டைகள் சிவகணங்களாக செய்து வைத்து சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் அவைகளுக்கும் செய்து ஆராதனை காட்டி அருள் பெருவது எங்கும் காணாத அதிசயம் ஆகும். இவ்வாலயத்தின் அருகில் உள்ள சித்தாமிர்த குளத்தில் நீறாடி இறைவனை நினைத்து மனம் உருகி நெய் திபம் ஏற்றினால் எந்த ஒரு தம்பதியும் குழந்தைபேறு பெருவார்கள் என்பது இறையன்பர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக விளங்குகிறது மேலும் ஆண்டவனின் பாதம் பதித்த இடத்தில் ஜோதி வெளிப்பட்டு சுயம்பு லிங்கம்அமைந்துள்ளது 

இக் கோயில் தல வரலாறு பார்போம் 

நெடுங்காலத்திற்கு முன்பு ஒரு தம்பதியினர் குழந்தைபேறு இல்லாமல் மனவேதனையுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிவபெருமானை மனதில் நினைத்து மனமுருக வேண்டி துதித்து வந்தனர். ஒருநாள் சிவபெருமான் அவர்கள் கனவில் தோன்றி நான் பெரியாண்டவர் அவதாரக் கோலதில் உலகை வலம் வந்தபோது என்னை நிலைகொள்ள செய்த இடமான திருநிலைக்கு சென்று வேண்டினால் உங்களுக்கு மழலை செல்வம் கிட்டும் என்றும் மேலும் உங்களுக்கு வழிகாட்டியாக ஒரு பன்றி அழைத்து செல்லும் என்று கூறி மறைந்தார். அவர்களும் அங்கு எப்படி செல்வது என்று தெரியாமல் விழித்தபொது திடீர் என்று அங்கு ஒரு பன்றி தோன்றி அவர்களுக்கு வழி காட்ட அவர்களும் இறைவன் கூறியவாறே அதன் பின்னே சென்றனர். அது ஒரு இடத்தில் ஆடாமல் அசையாமல் திருநிலையாய் நின்று பின் திடிர் என காணமல் மறைந்து. இறைவனே தங்களுக்கு பன்றி உருவில் வந்து வழிகாட்டியதாக நினைத்து வழிபட்டபோது அந்த இடம் வெட்டவெளியில் ஒளிமயமாய் திகழ்ந்து ஜோதி தரிசனம் தந்தது. அதைக் கண்ட அவர்கள் பெரியாண்டவர் நாமத்தை மனமுருக சொல்லி வழிபட்டனர். ஒர் ஆண்டுகழித்து ஆண்குழந்தை பெற்றதாக கோயில் தல வரலாறு கூறுகின்றது.
                                      
                                                சுயம்புலிங்கம் 
திருநிலையில் ஒருநிலையாய் நின்று அற்புதங்கள் நிகழ்த்தி அன்பர்களை காத்திடும் இறைவனாக, நெஞ்சாரத் தம்மை பணிந்து வணங்குவோர்க்கு வேண்டும் வரம் வழங்கி, இந்த புவணத்தை காத்து ரட்சிக்கும் எம்பெருமானாக பெரியாண்டவர் விளங்குகிறார். இம்மை மறுமை எனும் பிறவிப் பெருந்துன்பம் போக்கி அடியாரை ஆட்கொள்ளும் நாயகனாக எம்பெருமான் காட்சிதருகின்றார். அவரின் அற்புதங்கள் கணக்கில் அடங்கா. மழலை இல்லா மங்கையரின் மனக்குறை களைந்து மழலைகளை உடன்வழங்கி, மனநலம் கண்டோர் வாழ்வில் நலவலம் வழங்கி, மணமாகதப் பெண்களுக்கு எளிதில் மணங்கூட்டி, ஏழை எளியோரின் வாழ்வை காத்து ரட்ச்சித்து, உழைத்து ஊர்காக்கும் உழவர்க்ளின் பயிர் வாழ மழைவளம் அளித்து, கொஞ்சித்தவழும் குழந்தைகளை அஞ்சாது காத்து, நாடிவரும் அடியார்கள் வாழ்வில் அஞ்ஞானம் நீக்கி மெய்ஞானம் வழங்கி மேன்மையான வாழ்வு தரும் இத்திருத்தலத்திற்கு வருகை தந்து பெரியாண்டவரின் பொற்பாதம் வணங்கி அவரின் திருவருளைப் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டுகின்றோம்.
         
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சிறப்பு வழிபாடுகளும் அர்ச்சனை, ஆராதனை நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகின்றது. செங்கல்பட்டில் இருந்து தினமும் திருநிலை பெரியாண்டவர் கோவிலுக்கு திருகழுக்குன்றம் வழியாக T11 என்ற பேருந்து காலை 9 மணி மற்றும் மாலை 2 மணி இரவு 9.0 மணிக்கு சென்றுவருகிறது. ஆலயதொடர்புக்கு கை தொலைபேசி: 9842740957.
ஆலயம் செல்லும் வழி 
திருநீற்றை மருந்தாக்கி
உறுநோயை போக்குகின்ற
குருவான பெரியாண்டவா
மாறாத செல்வமும் பேரன
வாழ்வுடன் வளம் பல தந்திடும் சிவதண்டவா
வையம் போற்றிடும் வாசனே
வேண்டுதல் செய்வோரின் துயர் நீக்கும் நேசனே 
உன்னடி பற்றி வாழும் இன்னடியர்
மனக்குறை நீக்கும் மாமருந்தே
கலங்கிட மனம் தருவாய்
நினதடியில் தஞ்சம் புகுந்தோர்க்கே
என்றும் துணையாக வந்து வினைகளை களைந்திடுவாய் 
நலம் பல அருளிடுவாய் பெரியண்டவா 


ஆலயதொடர்புக்கு:
ஏகசீலன், ஆலய நிர்வாகி
கை தொலைபேசி: 9842740957.



No comments:

Post a Comment