Friday 21 September 2012

PERIYANDAVAR

பன்றி வடிவில் சிவன் தோன்றி அருளிய ஆலயம் 



நெடுங்காலத்திற்கு முன்பு ஒரு தம்பதியினர் குழந்தைபேறு இல்லாமல் 

மனவேதனையுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிவபெருமானை மனதில் 

நினைத்து மனமுருக வேண்டி துதித்து வந்தனர். ஒருநாள் சிவபெருமான் 

அவர்கள் கனவில் தோன்றி நான் பெரியாண்டவர் அவதாரக் கோலதில்

 உலகை வலம் வந்தபோது என்னை நிலைகொள்ள செய்த இடமான 

திருநிலைக்கு சென்று வேண்டினால் உங்களுக்கு மழலை செல்வம் கிட்டும்

 என்றும் மேலும் உங்களுக்கு வழிகாட்டியாக ஒரு பன்றி அழைத்து செல்லும் 

என்று கூறி மறைந்தார். அவர்களும் அங்கு எப்படி செல்வது என்று தெரியாமல்

 விழித்தபொது திடீர் என்று அங்கு ஒரு பன்றி தோன்றி அவர்களுக்கு வழி

 காட்ட அவர்களும் இறைவன் கூறியவாறே அதன் பின்னே சென்றனர். அது

 ஒரு இடத்தில் ஆடாமல் அசையாமல் திருநிலையாய் நின்று பின் திடிர் என

 காணமல் மறைந்து. இறைவனே தங்களுக்கு பன்றி உருவில் வந்து 

வழிகாட்டியதாக நினைத்து வழிபட்டபோது அந்த இடம் வெட்டவெளியில் 

ஒளிமயமாய் திகழ்ந்து ஜோதி தரிசனம் தந்தது. அதைக் கண்ட அவர்கள் 

பெரியாண்டவர் நாமத்தை மனமுருக சொல்லி வழிபட்டனர். ஒர்

 ஆண்டுகழித்து ஆண்குழந்தை பெற்றதாக கோயில் தல வரலாறு கூறுகின்றது.

I

Tuesday 11 September 2012

திருநீற்றை மருந்தாக்கி

உறுநோயை போக்குகின்ற

குருவான பெரியாண்டவா
மாறாத செல்வமும் பேரன
வாழ்வுடன் வளம் பல தந்திடும் சிவதண்டவா
வையம் போற்றிடும் வாசனே
வேண்டுதல் செய்வோரின் துயர் நீக்கும் நேசனே
உன்னடி பற்றி வாழும் இன்னடியர்
மனக்குறை நீக்கும் மாமருந்தே
கலங்கிட மனம் தருவாய்
நினதடியில் தஞ்சம் புகுந்தோர்க்கே
என்றும் துணையாக வந்து வினைகளை களைந்திடுவாய்
நலம் பல அருளிடுவாய் பெரியண்டவா 



www.periyandavar.com